Sunday, December 22, 2024

வருமான வரியில் விளிம்பு நிவாரணம் (Marginal Relief) எப்படி கணக்கிடுவது.

விளிம்பு நிவாரணம் (Marginal Relief) : 

7 இலட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 25,000 ரூபாய் வரை வருமான வரி தள்ளுபடி (Rebate) என்பது பெயரளவில் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் 7 இலட்சம் ரூபாய்கு 20,000 ரூபாய்தான் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் 7 இலட்சம் ரூபாய் என்ற வருமான வரி அலகின் விளிம்பில் (அருகில்) 7,00,001 முதல் 7,22,221 வரை வருமானம் இருப்பவர்களுக்கு விளிம்பு நிவாரணம் (Marginal Relief) வழங்கப்படுகிறது. 

(தொடர்ச்சி...) 

இந்த விளிம்பு நிவாரணம் (Marginal Relief) என்பது வருமான வரி கணக்கீட்டில் புதிய முறையை (New Regime) தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் முன் வருமான வரி விதிப்பு படிநிலையை (Income Tax Slab) ஒருமுறை பார்க்கலாம். 


வருமான வரி படிநிலை : 

3,00,000 வரை - முழு வரி விலக்கு 

3,00,001 முதல் 7,00,000 வரை - 5% வரி 

7,00,001 முதல் 10,00,000 வரை - 10% வரி 

10,00,001 முதல் 12,00,000 வரை - 15% வரி 

12,00,001 முதல் 15,00,000 வரை - 20% வரி 

15,0000 க்கு மேல் - 30% வரி 


முழுமையான வரி விலக்கு : 

3 இலட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் சென்றால் வரி உண்டு. ஆனால் 3 இலட்சத்து ஒன்று முதல் 7 இலட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய 5% வரித் தொகையான 20,000 ரூபாய் வரை தள்ளுபடி (Rebate) பெறலாம். 


விளிம்பு நிவாரணம் (Marginal Relief) ஏன் ? 

சிலருக்கு ஆண்டு வருமானம் 7,00,001 ரூபாய் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு ரூபாய் கூடுதல் வருமானம் வந்ததற்கு 20,000 ரூபாய் வரி செலுத்த வேண்டிய பாதக நிலை ஏற்படுகிறது. அதுவே 7,10,000 ரூபாய் வருமானம் இந்தால் 21,000 ரூபாய் வரி செலுத்த வேண்டும். இதுபோன்று பாதிக்கப்படும் நபர்களுக்கு நிவாரணம் அளிக்கவே இந்த விளிம்பு நிவாரணம் (Marginal Relief) என்ற சலுகை வழங்கப்பட்டு உள்ளது. இந்த விளிம்பு நிவாரண வரம்பானது 7,22,221 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு பொருந்தும். 


விளிம்பு நிவாரணத்திற்கு (Marginal Relief) பிறகு செலுத்த வேண்டிய வரி எப்படி கண்க்கிடுவது ? 

7,00,001 முதல் 7,22,221 வரை வருமானம் இருப்பின் 7,00,000 மேல் என்ன தொகை இருக்கிறதோ அதை மட்டும் செலுத்தினால் போதும். அதுவே விளிம்பு நிவாரணத்திற்குப் பிறகு செலுத்த வேண்டிய வருமான வரியாகக் கணக்கிடப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் 7 இலட்சத்துக்கு மேல் உள்ள பணத்தை அரசுக்கு கொடுத்துவிட்டால் அந்த 7 இலட்சத்துக்கு வருமான வரி கட்ட வேண்டாம் என்று சொல்வது போல் உள்ளது. 

உதாரணமாக : 

வருமானம் - வரி 

7,00,001 - ₹ 1 வரி 

7,05,000 - ₹ 5000 வரி 

7,10,000 - ₹ 10,000 வரி 

7,20,000 - ₹ 20,000 வரி 

7,22,000 - ₹ 22,000 வரி 

7,22,221 - ₹ 22,221 வரி 


விளிம்பு நிவாரணத்தில் (Marginal Relief) தள்ளுபடி எப்படி கண்க்கிடுவது ? 

விளிம்பு நிவாரணத்தின் கீழ் 7,22,221 வரை உள்ள வருமானத்திற்கான மொத்த வரியில் இருந்து நீங்கள் செலுத்த வேண்டிய வரியை (7 இலட்சத்துக்கு மேல் கூடுதலாக உள்ள பணம்) கழித்தால் வருவதே உங்களுக்கு கிடைக்கும் தள்ளுபடி (Rebate) தொகையாகும். 

உதாரணமாக : 

7,00,010 க்கு மொத்த வரி = ₹ 20,001 

செலுத்த வேண்டிய வரி = ₹ 10 

தள்ளுபடி (20,001 - 10) = ₹ 19,991 


7,05,000 க்கு மொத்த வரி = ₹ 20,500  

செலுத்த வேண்டிய வரி = ₹ 5,000 

தள்ளுபடி (20,500 - 5,000) = ₹ 15,500 


7,10,000 க்கு மொத்த வரி = ₹ 21,000  

செலுத்த வேண்டிய வரி = ₹ 10,000 

தள்ளுபடி (21,000 - 10,000) = ₹ 11,000 


7,20,000 க்கு மொத்த வரி = ₹ 22,000 

செலுத்த வேண்டிய வரி = ₹ 20,000 

தள்ளுபடி (22,000 - 20,000) = ₹ 2,000 


7,22,000 க்கு மொத்த வரி = ₹ 22,200 

செலுத்த வேண்டிய வரி = ₹ 22,000 

தள்ளுபடி (22,200 - 22,000) = ₹ 200  


7,22,221 க்கு மொத்த வரி = ₹ 22,222 

செலுத்த வேண்டிய வரி = ₹ 22,221  

தள்ளுபடி (22,222 - 22,221) = ₹ 1 


நன்றி ! 

அ. அறிவழகன், 

முதுகலை ஆசிரியர் 

செல் - 9944573722 


இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வருமான வரித்துறை கணக்கீடு லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம். 

வழிமுறைகள் : 

Advance Calculation 

New Regime 

Assessment 

Year 2025-26

Provide Income Details 

Net Income Before Standard Deduction


IT Department Link

Click Here 👇👇👇

Income Tax Calculation


No comments:

Post a Comment

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 25/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...